பாடசாலை மாணவர்களுக்கு கலை, இலக்கியத் துறை சார்ந்த பயிலரங்குகளை தொடர்ச்சியாக நடாத்திவரும் தமிழ் மாமன்றம் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் இலங்கை திருச்சபை தமிழ் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கான 2016ம் ஆண்டிற்கான முதலாவது கவிதைப் பயிலரங்கினை கடந்த14.02.2016 ஞாயிற்றுக்கிழமை, திருச்சபை தமிழ் மகாவித்தியாலயத்தில் நடாத்தியிருந்தது.
இரு பாடசாலைகளையும் சேர்ந்த கவிஆர்வம் மிக்க 30 மாணவர்கள் பயிலரங்கில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
காலை 8.30 மணியளவில் ஆரம்பமான பயிலரங்கில் கவிதை என்பது பற்றி மாணவர்கள் கொண்டிருக்கின்ற அபிப்பிராயம் அறியப்பட்டு, கவிதை என்றால் என்ன? கவிதையில் போக்கு எப்படி அமைந்துள்ளது? போன்ற விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டதோடு, மாணவர்களுக்கு தெரிந்த கவிதைகள் அவர்களது பாடப்புத்தகத்திலுள்ள கவிதைகள் போன்றவற்றை மாணவர்கள் நயங்துகாட்டியமையும் குறிப்பிடத்தக்கது.
மரபுக்கவிதைகள் என்றால் என்ன, அவைகளின் சிறப்பியல்புகள் என்பவை தெளிவுபடுத்தப்பட்டு, ஒருசில மரபுக்கவிதைகள் உதாரணமாக எடுத்துக்காட்டப்பட்டது. அத்துடன் புதுக்கவிதை என்றால் என்ன, அதனுடைய தோற்றம், மரபுக் கவிதை மற்றும் மற்றும் புதுக்கவிதைக்கிடையிலான வேறுபாடுகள் போன்றவைகளும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு குறித்த ஒரு விடயத்தின் கீழ், கவிதை எழுதுமாறு கேட்கப்பட்டு, அக் கவிதைகள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் சிறந்த கவிதைகள் எடுத்து, நயக்கபட்டு, சிறந்த இரு கவிதைகளுக்கான பரிசில்களும், பயிலரங்கில் திறம்பட தம்திறமையை வெளிபப்டுத்திய இரு மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமான இப் பயிலரங்கு, கவிதைகள் பற்றிய ஓர் அறிமுகமாக, அடிப்படையான விடயங்களை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்ததது. இப் பயிலங்கு ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக நடத்தப்படவுள்ளதோடு, கவிதைசார்ந்த இன்றைய இளம் சமுதாயம் கொண்டுள்ள நிலைமையை மேம்படுத்தும் வகையிலான செயற்றிடங்கள், பிரதேச கவிஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தமிழ் மாமன்றத்தின், விவாதம், சித்திரம் போன்ற துறைசார்ந்த பயிலரங்குகளும், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ் விடயங்கள் கலைத்துறை ரீதியில் மாணவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு மிகவும் பயனுடையாதாகவே அமைந்துள்ளது.






