வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் பெண்கள் விவகார திணைக்களத்தின் ஏற்பாட்டில் நீண்டகால அடிப்படையில் பெண்களது உரிமைகளை உறுதிப்படுத்தவது தொடர்பிலான செயலமர்வு நேற்று (16.02.2016) வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலமர்வில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இச் செயலமர்வானது முடிவில் மாகாண மட்ட செயலமர்வுடன் கொள்கை ஆவணமாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.
நேற்றைய ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.திருவாகரன், உதவிச்செயலாளர் திருமதி சுஜீவா, சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் திரு.ப.சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






