வவுனியாவில் 14 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று செவ்வாய்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, உக்குளாங்குளம், 04ம் ஒழுங்கையில் வசித்து வந்த விபுலானந்த கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் எஸ்.கரிஸ்னவி (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியின் தயார் வேலைக்கும், சகோதாரர்கள் பாடசாலைக்கும் சென்றிருந்த நிலையில் குறித்த மாணவி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். வேலை முடிந்து தயார் வீட்டிற்கு வந்த போதே மகள் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டுள்ளார். இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டதுடன் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த திடீர் மரணவிசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கு பணித்துள்ளார். தற்போது சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வீட்டில் இருந்த பொருட்கள் பலவும் தயார் வீடு சென்ற போது சிதறுண்டு காணப்பட்டதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் பாடசாலை மாணவி மர்மமான முறையில் மரணம் : கொலையா? தற்கொலையா?