
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று(19.02.2016) அதிகாலை யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
வவுனியா, செட்டிகுளம், துடரிக்குளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலை மேசன் வேலைக்கு கூலியாட்களைப் பார்க்க கிறிஸ்தவ குளத்திற்கு சென்ற வேளையிலேயே இவர் யானை தாக்கி மரணமடைந்துள்ளார்.
துடரிக்குளத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை தர்மலிங்கம் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.





