வவுனியாவில் வறிய மாணவர்களுக்கு கலைமகள் நற்பணி மன்றம் உதவி!!

546

 
வவுனியா கலைமகள் நற்பணி மன்றத்தின் இலண்டன் கிளையின் இணைப்பாளரும் பாடசாலையின் பழைய மாணவருமாகிய இராசசிங்கம் அவர்களின் நிதியுதவியுடன் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் 128வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலையில் கற்றலில் சிறந்து விளங்கும் 30 வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 17.02.2016 அன்று பாடசாலையின் திறந்த வெளியரங்கில் இடம்பெற்றது.

கலைமகள் நற்பணி மன்றத்தின் தலைவரும் ஸ்தாபகருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன், பாடசாலை அதிபர் சு.அமிர்தலிங்கம், மன்றத்தின் அங்கத்தவர் திரு.மிதுலன் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு மேற்படி கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

இதன்போது உரையாற்றிய கலைமகள் நற்பணி மன்றத்தின் தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்கள் குறித்த கற்றல் உபகரணங்களை வழங்கிய இராசசிங்கம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்ததுடன் இவ்வாறான சமூகச் செயற்பாடுகள் எதிர்காலத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

10400452_198924887129695_2617695963645131011_n 12715348_198924967129687_5831268233203121547_n 12715382_198924667129717_4029648969350192105_n 12715757_198924710463046_7313324573456722350_n 12717504_198924610463056_3699432281747899949_n 12729011_198924763796374_8997720338984663268_n 12729184_198924543796396_100331099887595162_n 12734061_198925083796342_2913589770609837035_n 12743941_198925007129683_2962620392551952811_n 12745738_198924813796369_1277165883179954487_n