
வவுனியா பொது வைத்தியசாலையில் கடந்த 18.02.2016 அன்று டெங்குத் தொற்றுக்குள்ளான ஒருவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த ஜோன் பீற்றர் என்ற 21வயதுடைய இளைஞனே டெங்குத் தொற்றுக்குள்ளான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலநாட்களாக கொழும்பில் வேலையின் நிமித்தம் தங்கியிருந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அண்மைக் காலங்களில் வவுனியாவில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த அதிகாரிகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.





