வவுனியா கருங்காலிக்குளம் அரசினா் தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனா் திறனாய்வு போட்டி 18.02.2016 அன்று பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எம்.பி.ஆா்.புஸ்பகுமார (அரச அதிபா் மாவட்ட செயலகம் வவுனியா), சிறப்பு விருந்தினராக சிவசக்தி ஆனந்தன் (நாடாளுமன்ற உறுபினா் வன்னி மாவட்டம்) கௌரவ விருந்தினா்களாக கா.உதயராசா (பிரதேச செயலகம் வவுனியா), திருமதி மாலதி முகுந்தன் (பிரதிக் கல்விப் பணிப்பாளா் – வலயக்கல்வி அலுவலகம் வவுனியா), கலாநிதி எஸ் சந்திரக்குமாா் (இணைப்புச் செயலாளா் – கிறிஸ்தவ மத விவகாரம், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு வன்னிமாவட்டம்), திரு.மங்களகுமாா் உவிக் கல்விப் பணிப்பாளா் ( உடற்கல்வி) ஆகியோா் வருகை தந்து விளையாட்டுப் போட்டியினை சிறப்பித்தனா்.
நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கருங்காலிக்குளம் பாடசாலையின் வளா்ச்சியில் பாடசாலை அதிபா், ஆசிாியா்களின் விடா முயற்சி, உழைப்பு ஒரு மைல்கல்லாகும்.






