வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா!!

455

இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடைசூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீசக்கரத்துடன் கூடிய ஸ்ரீசக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீகருமாரி நாகபூசணி அம்பாளின் எட்டாவது மகோற்சவ பெருவிழாவில் நேற்றைய தினம் 21.02.2016 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் தேர்த் திருவிழா இடம்பெற்றது.

காலை 5.30 மணிக்கு கோவிலின் பிரதமகுரு தலைமையில் காலைக் கிரியைகள் ஆரம்பமாகி காலை எட்டுமணிக்கு வசந்த மண்டபபூஜை இடம்பெற்று பின்னர் ஸ்ரீகருமாரி நாகபூசணி அம்பாள் உள்வீதி வலம்வந்து சரியாக காலை 9.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து 10.00 மணியளவில் ஆண் பக்தர்கள் ஒருபுறமும் பெண் பக்தைகள் மறுபுறமும் வடம் பிடிக்க அம்பாள் மயான வீதி ஊடாக கொரவபொத்தான வீதியை நூறுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இருபுறமும் சூழ்ந்திருக்க வந்தடைந்தாள். .

தூக்குகாவடி மற்றும் செதில்,பால்காவடிகள் கற்பூரச் சட்டிகள் அத்துடன் அங்கபிரதட்சனம் செய்துகொண்டும் கொண்டு அம்பாளின் அடியார்கள் தம் நேர்த்திகடன்களை நிறைவேற்றிய வண்ணம் அம்பாளின் பின்னால் வலம்வந்தனர். காலை 11.00 மணியளவில் அம்பாளின் ரதம் இருப்பிடத்தை வந்தடைந்தது. தொடர்ந்து அர்ச்சனைகள் இடம்பெற்று மதியம் ஒருமணியளவில் அவரோகணம் என்று சொல்லகூடிய பச்சைசாத்தல் உற்சவம் இடம்பெற்றது.

-கஜன்-

10247227_1155720374447914_5484050206478975756_n 10289992_1155720067781278_8612412589088606607_n 10320604_1155719487781336_6052009675881839077_n 10428623_1155718871114731_3215692438988025565_n 11933397_1155718694448082_3173694729355328227_n 12108727_1155719217781363_2928787697893666357_n 12705285_1155719681114650_3875409345976134214_n 12705590_1155721674447784_5888558294948442493_n 12715561_1155721164447835_6734826620320108924_n 12715634_1155718971114721_1890718506435552182_n 12715753_1155720981114520_5468571760010675467_n 12717429_1155722837781001_4453936939920216278_n 12717462_1155721261114492_4177155908764177868_n 12717853_1155718244448127_9038628564854252691_n 12728788_1155719171114701_1418855780704890126_n 12728921_1155719704447981_5713022143233258402_n 12729000_1155718474448104_5363052879342421898_n 12729364_1155720897781195_1908562198121385481_n 12733632_1155723277780957_2581603193723253633_n 12733655_1155722497781035_804649802507616554_n 12734096_1155719927781292_7778376943641273253_n 12734122_1155719007781384_1660200254597887023_n 12741876_1155718301114788_2365970829670178019_n 12741908_1155718211114797_264887994263514522_n 12741996_1155719054448046_3432237338826598453_n 12742375_1155720544447897_1254352823615322487_n 12742399_1155721647781120_3255169761451448969_n 12742632_1155719024448049_8291362499372670491_n 12742694_1155718811114737_734130566117309082_n 12742801_1155718164448135_4027613801713760957_n 12742850_1155721807781104_24570810176358015_n 12743522_1155721331114485_2163964671761700563_n 12743533_1155720604447891_896954724662721254_n 12743916_1155722954447656_7842588171225611740_n 12743926_1155719584447993_6740934222448453533_n 12744007_1155719541114664_8434951158202591257_n 12744021_1155720831114535_2679820780060702547_n 12744247_1155720017781283_774228630643450256_n 12744254_1155723071114311_3122733679704380240_n 12744407_1155723137780971_1998289215953066105_n 12744415_1155721874447764_5100015007618839470_n 12744438_1155721507781134_1287953106011626234_n 12744489_1155720474447904_1458204230707577305_n 12744508_1155722787781006_358737313485402248_n 12745450_1155720104447941_5955405196190467401_n 12745501_1155718777781407_8389482995342239260_n 12745553_1155722901114328_6479513255148389710_n 12745769_1155723247780960_2561544341599920545_n