
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கி வரும் அருளகம் சிறுவர் இல்லத்தை சேர்ந்தவர்களும் அகிலாண்டேஸ்வரி நுண்கலை கல்லூரி மாணவிகளும் திருமதி சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் 5 மாணவிகளின் பரத நாட்டிய அரங்கேற்றம் நேற்று (21.02.2016) வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
மேற்படி அரங்கேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி கௌரவ மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பின்வருமாறு தெரிவித்தார்..
யாழில் கலாசாரம் சீர்கெட்டு காணப்படுகின்றது, மோட்டார் சைக்கிளில் வாளுடன் இளைஞர்கள் சுற்றித் திரிகின்றார்கள், போதைவஸ்து, வாள்வெட்டு, சந்திச் சண்டை, பெண்கள் பின்னால் சுற்றுவது, பாடசாலை மாணவிகள் பின்னால் சுற்றுவது என இளைஞர்கள் சீர்கெட்டு காணப்படுகின்றார்கள்.
இவர்களில் முக்கால்வாசிப் பேரை பிடித்து உள்ளே போட்டுவிட்டோம். என்னும் உள்ளே போடவேண்டியவர்கள் இருக்கின்றார்கள்.
ஒன்றை மட்டும் நான் யாழ்ப்பாணத்தில் சொன்னேன் “இப்படிக் கேவலம் கெட்டவன் வவுனியாவில் இல்லை என்று”, இப்படிக் கேவலம் கெட்டவர்களை நான் வவுனியாவில் பார்த்ததே இல்லை என்று தெரிவித்தார்.
நீதிபதியின் சுவாரஸ்யமான பேச்சை கீழுள்ள காணொளியில் காணுங்கள்.





