வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள்)!!

360

இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய ஆசிரியர்களின் உபயத்தில் இடம்பெற்ற வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள் வீடியோ)!! 

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் எட்டாவது  மகோற்சவ பெருவிழாவில் நேற்றையதினம் 22.02.2016 ஞாயிற்றுக்கிழமை காலை  தீர்த்த  திருவிழா இடம்பெற்றது.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர்கல்லூரியின் இந்துமாமன்ற ஆசிரியர்களின் உபயத்தில்  தீர்த்த உற்சவம் காலை எழுமணியளவில்  ஆரம்பமானது. மேற்படி உற்சவத்தில் கல்லூரியின் ஆசிர்யர்கள் பெருமளவில் பங்குபற்றியிருந்தனர் . சுண்ணம் இடித்து கிரியைகள் இடம்பெற்று காலை பத்து  மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று காலை பதினோரு  மணியளவில் ஆலயத்தின் தீர்த்த கிணற்றடியில் கருமாரி நாகபூசணி சாமுண்டேஸ்வரி ஆகிய தெய்வங்கள்   ஆலயத்தின் இரண்டாம் வெளிவீதி ஊடாக வந்தடைந்தனர்.

அங்கு தீர்தோற்சவம் இடம்பெற்று பெற்று அர்ச்சனைகள்  இடம்பெற்று பின்னர் மதியம் ஒரு மணியளவில் யாகம் கலைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தீர்த்த உற்சவம் நிறைவு பெற்றது .மீண்டும் மாலை ஆறரை மணியளவில் கொடியிறக்க உற்சவங்கள் ஆரம்பமாகி இரவு எட்டரை மணியளவில் கொடியிறக்கபட்டது.

படங்கள் :கஜன் 

1655989_1116383505047686_7020341537869429251_n 11933439_1116284421724261_6580390224816830534_n 12670472_1116284265057610_9219391020004702065_n 12688365_1156378544382097_4135037741754767843_n 12715213_1156376587715626_6581015275108124301_n 12715632_1156404344379517_3821028980411137612_n 12728762_1156376121049006_6084644010368412818_n 12728972_1156404561046162_841586512527513808_n 12729076_1116285018390868_5453115375981362972_n 12729282_1156376261048992_4552137675796234321_n 12733358_1156376027715682_7786373524805542638_n 12734119_1156378241048794_1432861873174564094_n 12741864_1116284355057601_5972983979751574424_n 12741876_1156404427712842_3058083812465652181_n 12742174_1156376441048974_537194313701547446_n 12742275_1156378377715447_2611349216613990836_n 12742653_1156378611048757_2838322812166518848_n 12742656_1156404611046157_3141159929591727683_n 12743674_1116285115057525_3040703536662349191_n