வவுனியாவில் வன்புணர்வின் பின் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி வேண்டி இன்று(23.02.2016) காலை 10 மணிமுதல் 11 மணிவரை கறுப்புப்பட்டி அணிந்து வவுனியாவில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பாடசாலை மாணவர்கள் தமது ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.
பாடசாலை வாலியில் நின்றவாறு இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்ட மாணவர்களுடன் ஆசிரியர்களும் இணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்கள்.
மாணவர்கள் பதாதைகளில் காணப்பட்ட வாசகங்களில் சில..
“பெண் என்றால் பேயுமிரங்கும் மனிதக் குரங்குகளுக்கு ஏனில்லை இரக்கம்”
“பெண்களின் வாழ்வை வேட்டையாடும் வெறி நாய்களை கல்லால் அடித்துக் கொன்றாலும் எம் கோபம் அடங்காதடா”
“கண்டுபிடி கண்டுபிடி கொலையாளியைக் கண்டுபிடி”
“வித்தியா, சேயா வரிசையில் இன்னும் ஒரு ஹரிஷ்ணாவா”
“நிறுத்திவிடு நிறுத்திவிடு சிறுவர் துஸ்பிரயோகத்தை நிறுத்திவிடு”
விபுலாந்தாக் கல்லூரி

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி

தமிழ் மத்திய மகாவித்தியாலயம்

சைவப்பிரகாச மகளிர் கல்லூரி

கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயம்






