அவதானம்! உடல் எடை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்!!

359

body-fat-1

அமெரிக்காவை சேர்ந்த டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வகத்தில் எலிகள் மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டனர். சீன தலைநகர் பெய்ஷிங்கில் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இதனால் அங்கு காற்றில் புகை கலந்த அதிக அளவு மாசு ஏற்பட்டுள்ளது. எனவே பெய்ஜிங்கில் மாசுபட்ட காற்றை சுவாசித்த கர்ப்பிணி எலிகளை பிடித்து வந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அவற்றில் மாசு பட்ட காற்றை சுவாசித்த எலிகளின் நுரையீரல் மற்றும் கல்லீரல் திசுக்களில் வீக்கமும், அலர்ஜியும் ஏற்பட்டது. உடலில் கொழுப்பு சத்தும் அதிகரித்து எடை அதிகரித்து இருந்தது.

இன்சுலின் பிரச்சினையால் 2–ம் வகை நீரிழிவு நோயும் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் மாசு படாத காற்று பகுதியில் வாழ்ந்த எலிகளிடம் நடத்திய சோதனையில் இது போன்ற குறைபாடுகள் இல்லை. எனவே மாசுபட்ட காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.