வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ரோபோட்டிக்ஸ் தொடர்பான பயிற்சிகள்!!

588

 
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் ரோபோட்டிக்ஸ் தொடர்பான பயிற்சி பட்டறைகள்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், இந்த மாதந் தொடக்கம் பாடசாலை மானவர்களுக்கான “ரோபோடிக்ஸ்” தொடர்பான பயிற்சிப் பட்டறைகள் வவுனியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மாணவர்களிற்கான அடிப்படை இலத்திரனியல் மற்றும் அதனோடு தொடர்புபட்ட கணினி மொழிகள் என்பன மாணவர்களிற்கு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளார்கள். மாணவர்கள் இதில் ஆர்வமாகப் பங்குபற்றியிருந்ததனைக் காணக் கிடைத்தது.

தொடர்ந்தும் இந்த பயிற்சிப் பட்டறைகள் தொடரவுள்ளன. இறுதியில், மாணவர்கள் தாமாகவே ரோபோவினை செய்யும் ஆற்றல்களைப் பெற்றுக் கொள்வார்கள் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

12665643_10205422984966580_738053292_n 12665666_10205422985086583_1406145344_n 12767635_10205422985006581_1355292016_n 12782194_10205422984886578_1269424332_n 12782572_10205422985046582_144148218_n