
வவுனியா உக்குளாங்குளத்தில் கடந்த 16.02.2016 அன்று வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட மாணவி கரிஸ்ணவியின் கொலையை கண்டித்து வவுனியாவில் பாரியளவில் தொடர் போராட்டங்களை நடைபெற்று வருகின்றன.
வவுனியாவில் பல்வேறு அமைப்புகள் இணைந்து இன்று மிகப் பெரிய அளவில் போராட்டம் ஒன்றை நடாத்தியதுடன், ஜனாதிபதிக்கான மனு வவுனியா அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் வவுனியாவில் அனைத்து பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் இன்று சிறுமியின் கொலைக்கு நீதிவேண்டி கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா தவிர முல்லைதீவு, கிளிநொச்சி போன்ற இடங்களிலும் இன்று தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து நாளை(24..02.2016) புதன்கிழமை வவுனியாவில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப் பூரண கர்த்தாலுக்கு அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் சமூக பொது அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள், அரச, அரச சார்பற்ற அமைப்புக்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், வர்த்தக சங்கம், வவுனியா பிரஜைகள் குழு, யாழ் பல்கழைக்கழக வளாகம், வவுனியா விவசாயக் கல்லூரி, தேசிய கல்வியல் கல்லூரி, வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் ஆகிய அமைப்புக்களை ஆதரவு தரும்படி ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுள்ளனர்.
தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் வரும் புதன்கிழமை பூரண கர்த்தால் : அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள்!!






