வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம்!!

714

 
வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள் இன்று புதன்கிழமை (24.02.2016) காலை சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா உக்குளாங்குளத்தில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 13 வயது பாடசாலை மாணவி ஹரிஸ்ணவியின் கொலைக்கு நீதி கோரியே இவர்கள் வவுனியா விவசாயக் கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தண்டனை வழங்க தெரியாவிடின் குற்றவாளிகளை மக்களிடம் கொடு, வன்புணர்விற்கு தண்டனையை கடுமையாக்கு, அரசே மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய், எம் நாட்டில் பணத்திற்கு பறிபோகின்றதா நீதி என்ற வாசங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

20160224_102452 20160224_102646 20160224_102651 20160224_102722 20160224_102859 20160224_102909 20160224_102919 20160224_102926 20160224_102943 20160224_102951 20160224_103010 20160224_103037 20160224_103044 20160224_103051 20160224_103217 20160224_103228