வவுனியா மகாறம்பைக்குளத்தில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம்!!

515

 
வவுனியா மகாறம்பைக்குளம் கிராமசேவையாளர் அலவலகத்தினை உடைத்து நொருக்கி சேதப்படுத்தியவரை கைது செய்யக்கோரி இன்று காலை 9 மணியளவில் அப்பகுதி பொது மக்கள், மாதர்சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம் என்பன இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வன்னி மாவட்ட நாமாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன், முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், ஆகியோர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களிடம் அரச சொத்துக்களை சேதப்படுத்தியவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

அத்துடன் வவனியா பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம். விஜயரட்ணம் அவர்களிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

IMG_7269 IMG_7273 IMG_7284 IMG_7290 IMG_7292 IMG_7293 IMG_7294 IMG_7297 IMG_7308 IMG_7318 IMG_7324 IMG_7325 IMG_7332