வவுனியாவில் 11 வயதுச் சிறுமி மீது துஸ்பிரயோகம்!!

567

Abuse

வவுனியா சாஸ்திரிகூளாங்குளம், தரணிக்குளம் பகுதியில் இன்று (27.02.2016) மாலை 11 வயதுடைய சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புபட்ட இரு இளைஞர்களையும் பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான 11வயதுச் சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று மாலை 5.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் பொதுவைத்தியசாலைக்கு பொலிசாரால் அழைத்து வரப்பட்டதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
.
கடந்த 16 ஆம் திகதி 14 வயது பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ருந்தமை குறிப்பிடத்தக்கது.