வவுனியா புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 14 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைவு!!

1191

 
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வு பெற்ற 14 முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைத்துவைக்கும் நிகழ்வு இன்று (29.02.2016) இடம்பெற்றது. வவுனியா புனர்வாழ்வு இணைப்புக்காரியாலயம் மற்றும் பாதுகாப்பு அடைக்கலம் வழங்கும் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்றது.

புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை உறவினரிடம் கையளிப்பு செய்து வைத்தார்.

ஆண்கள், பெண்கள் என மொத்தமாக 14முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பனர்களே இன்று சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர். இன் நிகழ்வில் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி, விமானப்படை அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள் சிவில் அமைப்புக்கள, பொது மக்கள்; என பலரும் கலந்து கொண்டனர்.

DSC01931 DSC01934 DSC01953 DSC01955 DSC01971 DSC01996 DSC01998 DSC02000 DSC02003