காதலையும் காதலனையும் பிரிக்க முயற்சித்ததாக இயக்குநர் சேரன் மகள் கொடுத்த புகாரின் பேரில் சேரனை அழைத்து விசாரணை நடத்தினர் ஆயிரம் விளக்குப் போலீசார்.
அப்போது சேரனுக்கு ஆதரவாக முன்னணி இயக்குநர்கள் பாலா, அமீர், சேரன் போன்றோர் வந்திருந்தனர். இயக்குநர் சேரன் மகள் தாமினி, உதவி இயக்குநர் சந்துருவை தீவிரமாகக் காதலிக்கிறார்.
இந்தக் காதலைப் பிரிக்க அப்பா சேரன் முயற்சிப்பதாக தாமினியே போலீசில் புகார் செய்தார். கோடம்பாக்கத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது இந்த விவகாரம். இந்த நிலையில் தாமினி கொடுத்த புகாரின் பேரில் இயக்குநர் சேரனை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர் போலீசார்.
சேரன் மனைவி செல்வராணி, மகள் தாமினி ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். தன்னுடன் வந்துவிடும்படி சேரன் எவ்வளவோ கேட்டும் தாமினி உடன் வர மறுத்துவிட்டார். உரிய நேரத்தில் தாமினிக்கு திருமணம் செய்து வைப்பதாக, சேரனுடன் வந்திருந்த இயக்குநர்கள் பாலா, அமீர் மற்றும் சமுத்திரக்கனி போன்றோர் கூறினர். ஆனால் எதையும் ஏற்க தாமினி மறுத்துவிட்டார்.