
வவுனியா கருவேப்பங்குளம் பகுதியில் நேற்று பிற்பகல் சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குடும்பப் பெண் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அர்ச்சுனராசா பிரதிபா என்ற 34 வயதுடைய குடும்பப் பெண்ணாவார். இவரது கணவன் மனைவியைக் காப்பாற்ற முற்பட்டபோது கைகளில் எரிகாயம் எற்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
உயிரிழந்தவரின் உடல் மரண விசாரணைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





