
யாழ் என்டர்டைன்மென்ட் நிறுவன ஏற்பாட்டில் மணிமாறனின் தென்னிந்திய புத்தர் இசை குழு வவுனியாவில் பாரம்பரிய பறையிசை, நடன பயிற்ச்சி பட்டறையை 24.02.2016 தொடக்கம் 26.02.2016 வரை நடாத்தியது.இதில் மாணவர்கள் உட்பட 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பறையிசை, நடன பயிற்சியை பெற்றுக் கொண்டனர்.
பயிற்சியை முடித்துக் கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், தென்னிந்திய கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வும் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடை பெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாணசபை சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் எம்.பி .நட்ராஜ் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திரு.ப.சத்தியசீலன், வைத்தியகலாநிதி பி.யோகானந்த், வைத்தியகலாநிதி சி.சுதாகரன், தேசபந்து இ.கௌதமன், எஸ்.எஸ்.வாசன், தமிழருவி சிவகுமாரன், மேழிகுமரன் அருந்தவராஜா, செ.மயூரன், சந்திரபத்மன், கந்தப்பு ஜெயந்தன், ரா.ராஜேஸ்வரன், ந.பார்த்திபன், யாழ் என்டர்டைன்மென்ட் நிறுவன சாலினி சார்ள்ஸ், பிரியன், ஆசிரியைகள் சூரியயாழினி, கஜரதி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), கவிஞர் மாணிக்கம் ஜெகன், யோகா, பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர் .
நிகழ்வில் மாணவர்களின் மறு வாசிப்பும், மணிமாறனின் புத்தர் கலைக்குழுவின் பறையிசை நிகழ்வும் இடம் பெற்றதுடன் விருந்தினர்களின் உரைகளும் இடம் பெற்றன .
அருகிவரும் பாரம்பரிய கலையான பறையிசையை மீண்டும் புத்துயிர் கொடுத்து வாழ வைக்க எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் என அனைவரும் தெரிவித்ததுடன் வட மாகாணசபை ஊடாக அதற்கான முயற்சிகள் எடுபதாக வடமாகாண சுகாதார அமைச்சரும், உறுப்பினரும் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் தேசபந்து இ.கௌதமன் (சுரேன்) அவர்களால் புத்தர் கலி குழுவினர் நினைவுச் சின்னம் வழங்கி, மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் வவுனியா கலைஞர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
பின்னர் பயற்சியை முடித்துக்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.






