வவுனியாவில் உணவகங்களுக்கு அபராதம் விதிப்பு : உணவக உரிமையாளருக்கு பிடியாணை!!

517

DSC02066

வவுனியாவில் கடந்த இரண்டு தினங்களாக பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது உணவகங்கள், வெதுப்பகங்கள் உட்பட சுகாதார சீர்கேடான இடங்களை இனங்கண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கையில் கடந்த இரண்டு தினங்களில் மேலும் ஒரு வவுனியா நகரிலுள்ள வெதுப்பகத்திற்கு எதிராக நீதிமன்றத்தினால் 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன் தற்காலிகமாக வெதுப்பகத்தினை மூடி திருத்தவேலைகளை மேற்கொண்ட பின்னர் பொது சுகாதார பரிசோதகர்களினால் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வெதுப்பகத்தினை திறக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இரண்டு உணவகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின் போது ரூபா 10 ஆயிரம் தண்டப்பணமாக நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உணவக உரிமையாளர் ஒருவருக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையில் உரிமையாளர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கததால் உணவக உரிமையாளருக்கு பிடியாணை நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமது இந்நடவடிக்கை வவுனியாவில் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

DSC02057 DSC02060 DSC02061 DSC02065 DSC02066