வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று (04.03.2016) காலை 10.30 மணியளவில் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. நெளுக்குளம்- கூமாங்குளம் வீதியில் அமைந்துள்ள குறித்த வீடு சமையல் அறையிலிருந்த நெருப்பு அதிக காற்று காரணமாக பரவியாதால் தீப்பற்றி முற்றாக எரிந்துள்ளது.
தீப்பிடித்த சமயம் வீட்டின் உரிமையாளர் அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளார். அயலவர்களின் முயற்சியுடன் தீயை அணைக்க முயன்றபோதும் வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
ஆடைகள், சமையலறைப் பொருட்கள், வீட்டு உடைமைகள் என சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் 7ஆயிரம் ரூபாய் பணமாக வீட்டிற்குள் இருந்துள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக பண்டாரிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






