சிம்பாவே ஜனாதிபதி தேர்தலில் ரொபர்ட் முகாபே மீண்டும் வெற்றி

371


zibabeweசிம்பாவேயின் 7வது ஜனாதிபதி தேர்தலில் ரொபர்ட் முகாபே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் ஜானு-பி.எஃப். கட்சியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார்.



சிம்பாவேயில் கடந்த புதன்கிழமை ஜனாதிபதி தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் ஒன்றாக நடத்தப்பட்டது.

சிம்பாபே சுதந்திரம் பெற்றது முதலே தலைமைப் பீடத்தில் வீற்றிருக்கும் தற்போதைய ஜனாதிபதி ரொபர்ட் முகாபே 7வது முறையாக களம் கண்டார்.



அவரை எதிர்த்து, தற்போதைய பிரதமர் மோர்கன் வான்கிரை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார்.



ரொபர்ட் முகாபேவுக்கு ஆதரவாக 61 வீத வாக்குகளும் அவருக்கு எதிராக 34 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.


பாராளுமன்ற தேர்தலில் முகாபேயின் கட்சி மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பெற்றுள்ளதால் சிம்பாவே அரசியல் சட்டத்தை திருத்தியமைக்கும் அளவுக்கு ஜனாதிபதி ரொபர்ட் முகாபே பலம் பெற்றுள்ளார்.