மொனராகலையில் மீண்டும் காட்டுத் தீ..!

513

vavuniyaமொனராகலை – தெஹெல்லெஹெல மலை பகுதியில் மீண்டும் தீ பரவியுள்ளது.

இதற்கு முன்னர் தீ ஏற்பட்ட பிரதேசத்திற்கு எதிர் திசையில் உள்ள பகுதிகளில் இத்தீ பரவியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மொனராகலை மாவட்ட உதவி பணிப்பாளர் ரவிந்திர குமார தெரிவித்தார்.

தீயை கட்டுப்படுத்த அப்பிரதேசத்திற்குச் செல்ல முடியாதுள்ளதென அவர் குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை தெஹெல்லெஹெல மலை பகுதியில் ஏற்பட்ட தீயினால் 150 ஏக்கர் எரிந்து சாம்பலானமை குறிப்பிடத்தக்கது.