வவுனியாவில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக உறவினர்கள் அடையாள உண்ணாவிரதம்!!

516

 
அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் தமது உறவுகளுக்காக வவுனியா நகர சபை பொங்கு தமிழ் நினைவு தூபிக்கு முன்பாக இன்று (08.03.2016) காலை 8 மணிக்கு அடையாள உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டது.

இவ் அடையாள உண்ணாவிரதம் அரசியல் கைதிகளின் உறவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . பிற்பகல் 4 மணிவரை இவ் அடையாள உண்ணாவிரம் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் வவுனியா சங்கம் என்பன இணைந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

DSC_0249 DSC_0250 DSC_0251 DSC_0252