பந்துவீச்சாளர் பட்டியில் 17 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடம் பிடித்த இந்திய வீரர்!!

303

PTI1_23_2013_000130B

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் சகலதுறை ஆட்டக்காரர் ரவீந்தர் ஜடேஜா முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஒருநாள் தரவரிசையில் இந்திய பந்து வீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடித்திருப்பது 17 ஆண்டுகளுக்குப் பிறகான சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பாவேயை இந்தியா 5- 0 என்று வெற்றி பெற்றதையடுத்து புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதன்படி இந்தியா அணி 123 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா 114 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 3ம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 6வது இடத்தில் உள்ளது.

துடுப்பாட்ட தரவரிசையில் தென்னாபிரிக்க வீரர் ஹசீம் அம்லா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். டிவிலியர்ஸ் இவ்வளவு தோல்விகளுக்கு இடையேயும் 2வது இடம் வகிக்கிறார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி 372 ஓட்டங்களை குவித்த சங்கக்காரா 8 ஆண்டுகளுக்குப் பிறகு 3ம் இடத்தில் உள்ளார். இதனால் கோலி ஒரு இடம் இறங்கி 4ம் இடத்திற்கு வந்துள்ளார். தோனி 7ம் இடத்திலும், உள்ளனர்.

புதிய நட்சத்திரம் ஷிகர் தவான் 16 இடம் உயர்ந்து 23வது இடத்தைப் பிடித்துள்ளார். பந்து வீச்சு தரவரிசையில் ரவீந்தர் ஜடேஜா 4 இடங்கள் முன்னேறி மேற்கிந்திய வீரர் சுனில் நரைனுடன் 733 புள்ளிகளுடன் பந்து வீச்சுத் தரவரிசையில் முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறார்.

இந்தியா சார்பில் 17 ஆண்டுகளுக்கு முன்பாக முன்னாள் தலைவரும் சுழற்பந்து வீச்சாளருமான கும்ளே முதலிடம் வகித்தார் அதன் பிறகு இப்போது ஜடேஜா! இந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலிலும் ஜடேஜா முதலிடம் வகிக்கிறார். 22 ஆட்டங்களில் 38 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் ஜடேஜா.