மத்திய கிழக்கில் அமெரிக்க தூதரகங்கள் திடீரென மூடப்பட்டது ஏன்?

351

embassyமத்திய கிழக்கிலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் உள்ள தனது தூதரகங்களை அமெரிக்கா தொடர்ந்து மூடியுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த அல்-கைதா தலைவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட தகவல்கள் அமெரிக்காவினால் ஒட்டுக்கேட்கப்பட்டிருப்பதாகவும், மிகப்பாரிய தாக்குதல்கள் மூலம் தூதரகங்களை சிதைக்க திட்டமிட்டுருப்பதை அமெரிக்க அரசு அறிந்திருப்பதாகவும் இதையடுத்தே இந்நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பாதுகாப்புக் காரணம் குறித்து இது தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட வேண்டாமென ஒபாமா தலைமையிலான நிர்வாக அதிகாரிகள் மேற்குலக ஊடகங்களுக்கு வேண்டுதல் விடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது. மேலும் பல அதிகாரிகளின் கூற்றுப் படி அல் கைதாவின் முக்கிய தலைவர்கள் ஒழிந்திருப்பதாகக் கருதப்படும் யேமெனில் இருந்து கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதில் முக்கியமாக ரம்ழான் பண்டிகை முடிவுறும் மாதம் என்பதாலும் பாகிஸ்தானின் சிறைச்சாலைகள் உடைக்கப் பட்டு முக்கிய குற்றவாளிகள் தப்பித்திருப்பதாலுமே மத்திய கிழக்கிலும் வட ஆப்பிரிக்காவிலும் அரச கருமங்களைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விரு பகுதிகளிலுமே மொத்தம் 22 அமெரிக்க தூதரகங்கள் ஞாயிற்றுக் கிழமை மூடப்பட்டுள்ளன. மேலும் வெள்ளை மாளிகையும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளும் இது குறித்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.

மூடப்பட்ட அமெரிக்கத் தூதரகங்களில் மௌரிடானியா இலிருந்து ஓமான் வரையும்,பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானும் கூட அடங்கும். மேலும் இந்த அடைப்பு பல இடங்களில் இன்னும் சில நாட்களுக்கும் தொடரலாம் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.

மூடப்பட்ட தூதரகங்களின் விபரம்:

U.S. Embassy Riyadh, Saudi Arabia
U.S. Consulate Dhahran, Saudi Arabia
U.S. Consulate Jeddah, Saudi Arabia
U.S. Embassy Baghdad, Iraq
U.S. Consulate Basra, Iraq
U.S. Consulate Erbil, Iraq
U.S. Embassy Abu Dhabi, United Arab Emirates
U.S. Consulate Dubai, United Arab Emirates
U.S. Embassy Tripoli, Libya
U.S. Embassy Algiers, Algeria
U.S. Embassy Amman, Jordan
U.S. Embassy Cairo, Egypt
U.S. Embassy Djibouti, Djibouti
U.S. Embassy Dhaka, Bangladesh
U.S. Embassy Doha, Qatar
U.S. Embassy Kabul, Afghanistan
U.S. Embassy Khartoum, Sudan
U.S. Embassy Kuwait City, Kuwait
U.S. Embassy Manama, Bahrain
U.S. Embassy Muscat, Oman
U.S. Embassy Nouakchott, Mauritania
U.S. Embassy Sana´a, Yemen