புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தின் நேரப்பதிவாளர் வெள்ளை வானில் கடத்தப்பட்டார்..!

639

kidnappingகொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்தின் நேரப்பதிவாளர் வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

நடுப்பகலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரை கடுமையாக தாக்கி வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏ.காமினி என்ற நேரப் பதிவாளரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

பஸ் நடத்துனர்களை அச்சுறுத்தி இந்த நபர் கப்பம் பெற்று வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கப்பம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் எவரும் இதுவரையில் முறைப்பாடு செய்ததில்லை. புறக்கோட்டை பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.