கந்தபுராண காலத்துக்கு முற்பட்டதாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தேர்த்திருவிழா நேற்று திங்கட்கிழமை காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 9வது தினமான நேற்று தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. இந்த தேர் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை இன்றைய தினம் மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்த உற்சவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்உற்சவத்தில் நாடுமுழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வருகின்றனர். இதேவேளை மட்டக்களப்பின் பலபகுதிகளிலுமிருந்தும் ஆலயத்திற்கு சிறப்பு போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
-ரமணன்-








