இன்று ஆடி அமாவாசை தினம்..!

497


vavuniyaபிதிர் தர்ப்பணம் செய்யும் புனித ஆடி அமாவாசை தினம் இன்றாகும். இன்று ஆடி மாதம் 20ஆம் திகதி ஆடி அமாவாசை விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை தினத்தில் இந்துக்கள் தமது மூதாதையர்களை நினைவு கூர்ந்து பிதிர் தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பானது.



பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்கம் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ஆடி அமாவாசை தினத்தன்று அதிகாலையில் நீராடி, சிவாலயம் தரிசனம் செய்து பிதிர்தர்ப்பணம் செய்த பின்னர் அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.



யாழ். மக்கள் இன்றைய தினம் கீரிமலை நகுலேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்து கீரிமலை கேணியில் தீர்த்த மாடுவார்கள்.



மட்டக்களப்பு வாழ் மக்கள் மாமாங்கப்பிள்ளையார் கோவில், அமிர்தகழியில் தீர்த்தமாடுவார்கள்.


திருகோணமலை வாழ் மக்கள் கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தமாடி பிதிர் கடன் செலுத்துவர்.

இதேபோன்று கொழும்பு முகத்துவாரம் கோயிலிலும், சிலாபம், மாயவனாற்றங் கரையிலும், திருக்கேதீஸ்வரம் பாலாவி கரையிலும் புனித ஆறுகளிலும், நீராடி இறைவனை வழிபடுவார்கள்.


இப் புனித நாளில் பிதிர் தர்ப்பணம் செய்து வழிபடுவதால் பாவங்கள் நீங்கி விமோசனம் பெற முடியும் என்ற நம்பிக்கை இந்து மக்களிடம் உள்ளது.