இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எச்.ஐ.வீ நோய்த் தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 45000 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த ஆண்டில் எயிட்ஸ் நோய்த்தொற்று பரவிய குழந்தைகளின் எண்ணிக்கை 64 என சுகாதார அமைச்சின் பால் நோய் மற்றும் எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியமை தொடர்பில் அறியாமலேயே பலர் இருக்கின்றனர்.
மருத்துவ பரிசோதனைகளின் மூலம் நோயாளியைக் கண்டு பிடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களை விடவும் இந்த ஆண்டில் அதிகளவான எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.