தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!!

325

tamilnadu cricket association

சென்னை சேப்பாக்கம் மைதானம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய சென்னை பொலீஸூக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான மைதானத்தில் புதிய பார்வையாளர் அரங்குகள் கட்டப்பட்டன. ஆனால் இந்த புதிய அரங்குகள் விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை அரசுக்குத் தெரிவித்து வெவ்வேறு துறைகளிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி பெற்றிருக்கிறது.

இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் உயிருடன் விளையாடி இருக்கிறது என்று ஜபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலர் மோகன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர பொலீஸிடம் 2011ம் ஆண்டு புகார் மனு தாம் அளித்ததாகவும் அதன் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தமது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வாசுகி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிட்டார்.