மாடு­க­ளுக்கு ஆடம்பரத் திருமணம் : இந்தியாவில் விநோதம்!!

296

cattle-marriage

இந்­தி­யாவைச் சேர்ந்த ஒருவர் இரு மாடு­க­ளுக்கு ஆடம்­பர திரு­மண வைப­வத்தை நடத்­தி­யுள்ளார். குஜராத் மாநி­லத்தின் பவ்­ந­கரில் கடந்த வியா­ழக்­கி­ழமை இத்­தி­ரு­மண வைபவம் நடை­பெற்­றது. அஹ­ம­தாபாத் நகரைச் சேர்ந்த வர்த்­த­க­ரான விஜய் பர்­சனா என்­ப­வரே இந்த ஆடம்­பர திரு­ம­ணத்தை நடத்­தினார்.

உடற்­ப­யிற்சி நிலை­யங்கள் (ஜிம்) பல­வற்றை நடத்­தி­வரும் விஜய் பர்­சனா, அறக்­கட்­ட­ளை­யொன்­றையும் நடத்தி வரு­கிறார். இவ­ருக்குச் சொந்­த­மான பண்­ணை­யொன்றில் உயர்­ர­கத்­தை சேர்ந்த இரு பசுக்கள் உள்­ளன. ராதா, பூனம் என இப்­ப­சுக்­க­ளுக்கு அவர் பெய­ரிட்­டுள்ளார். இப்­ப­சுக்­க­ளுக்கு இரண்­டரை வருட வய­தா­ன­வுடன் அவற்றை காளை­யொன்­றுடன் ஜோடி சேர்த்­து­வைக்க விஜய் பர்­சனா விரும்­பினார்.

இதற்­காக “அர்ஜூன்” எனும் காளை தெரிவு­செய்­யப்­பட்­டது. இந்த நிகழ்வை ஆடம்­பர திரு­மண வைப­வ­மாக அவர் நடத்­தினார். இசை நிகழ்­ச­சிகள், ஊர்­வலங்கள் சகிதம் இவ்­வை­பவம் நடை­பெற்­றது. ஆயி­ரக்­க­ணக்­கான கிரா­ம­வா­சிகள் இந்த “திரு­மண வைப­வத்தை” காண்­ப­தற்கு திரண்­டி­ருந்­தனர். இது குறித்து விஜய் பர்­சனா (44) கருத்துத் தெரி­விக்­கையில், “பசுக்­கள் தான் எம்மை முன்­னேற்ற முடியும்.

நான் ஃபிட்னஸ் துறையில் இருப்­பவன் என்ற வகையில், எமது ஆரோக்­கி­யத்­துக்கு பசுப்பால் தயா­ரிப்­புகள் ஏற்­ப­டுத்தும் சிறந்த விளை­வு­க­ளுக்கு நான் சாட்­சி­யாக உள்ளேன். ஒவ்­வொரு வீட்­டிலும் பசு­வொன்று வளர்க்­கப்­பட வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த செய்தியை பரப்புவதற்காக பூனத்தின் திருமணத்தை ஒரு பொது நிகழ்வாக நான் கொண்டாடினேன் எனத் தெரிவித்துள்ளார்.