மூன்று மாதங்களுக்குள் 70 எயிட்ஸ் நோயாளிகள்!!

195


69416_resized_aids_ribbon

கடந்த 3 மாதங்களுக்குள் 70 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.மேலும் ஓரினச் சேர்க்கை மூலமே அதிகளவு எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.இவ்வாறு எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 100க்கு 70 வீதமானோர் ஆண்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் 25 தொடக்கம் 46 வயதுக்கு இடைப்பட்டவர்களே எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எயிட்ஸ் நோய் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.