கேள்விக்குறியாகியுள்ள வட்சனின் கிரிக்கெட் எதிர்காலம்..!!

500

Shane Watson

டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ள வாட்சனின் துடுப்பாட்டம் மீண்டும் சரிவு கண்டதையடுத்து அவர் அணியில் இருந்து கழற்றிவிடப் படலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவருக்குப் பதிலாக அதிரடி தொடக்க வீரர் டேவிட் வானரை மீண்டும் பணியில் இறக்கலாம் என்று ஆஸி அணி நிர்வாகம், பயிற்சியாளர் டேரன் லீ மேனும் கருதுகின்றனர்.

வட்சன் தொடர்ந்து எல்.பி அல்லது வேகப்பந்து வீச்சாளர்களிடம் ஸ்லிப்பில் பிடி கொடுத்து ஆட்டமிழப்பது என்ற நிலையில் இருந்து வருகிறார். அவுஸ்திரேலியா போன்ற அணிகளில் அதுவும் கிளார்க், லீமேன் போன்ற கண்டிப்பான நபர்களின் மேற்பார்வையில் தொடர்வது வட்சனுக்குக் கடினம்.

இன்னொரு முறை எல்.பி-யோ அல்லது ஸ்லிப்பில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தாலோ அணியிலிருந்து வெளியேற வேண்டியதுதான் என்பதை அவர்கள் திட்டவட்டமாக துடுப்பாட்ட வீரர்களிடம் கூறும் கலாசாரம் அங்கு உள்ளது.

வட்சனின் இந்த ஆஷஸ் தொடர் ஓட்ட எண்ணிக்கை 46, 30, 20, 19 தான். சரியும் அவரது கிரிக்கெட் வாழ்வின் பிரதிபலிப்பாக இது பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் நடுவரிசையில் வட்சனை களமிறக்கலாமா என்ற யோசனையும் இருந்து வருகிறதாம். அப்படி இல்லாது வெளியேற்றப்பட்டால் வட்சன் மீண்டும் அணியில் இடம்பிடிக்க கடுமையாக பாடுபடவேண்டும் என்பது உறுதி.