குடிவெறியில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் பனேசர் அடாவடி!!

444

panesar

குடிவெறியில் இரவு நேர விடுதில் பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்து அடாவடியில் ஈடுபட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொன்டி பனேசருக்கு பொலிஸார் அபராதம் விதித்தனர்.

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொன்டி பனேசர். இந்திய வம்சாவளி வீரரான இவர் 48 டெஸ்டில் 164 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டிக்கான அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

இவர் தெற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள இரவு நேர கிளப்புக்கு சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். குடிவெறியில் அங்கிருந்த பெண்களுக்கு தொல்லை தர உடனடியாக கிளப்பை விட்டு வெளியேறுமாறு நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த கோபத்தில் கிளப்பின் மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்து விட்டு ஓடினார். இவரை துரத்திய காவலர்கள் அருகிலுள்ள “பீட்சா நிலையத்தில்” வைத்து பிடித்து மீண்டும் கிளப்புக்கு இழுத்து வந்தனர். பின் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவருக்கு ரூ. 8500 அபராதம் விதிக்கப்பட்டது. பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,

பிரைட்டன் பகுதியில் உள்ள கிளப் அருகில் அதிகாலை 4.13 மணி அளவில், போதையில் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டதால் பனேசருக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்றார்.

போதையில் ரகளையில் ஈடுபட்டதற்காக பனேசர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். பனேசர் பொலிஸில் சிக்குவது இது முதன் முறையல்ல. கடந்த 2011ல் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரித்த பொலிஸார் வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்தனர்.

சமீபத்தில் கவுன்டி போட்டியின் போது களத்தில் மோசமாக நடந்து கொண்டதால், சசக்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.