முல்லைத்தீவு தேராங்கண்டல் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட இருவருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் 6 வருட கடூழியச் சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது.
கடந்த மே மாதம் 16 ஆம் திகதி குற்றவாளிகள் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இருவருக்கும் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு தலா இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை என்ற கணக்கில் ஆறு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களை முறைப்பாட்டாளரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.





