பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் சுயவிருப்புடன் நாடு திரும்புமாறு தூதுவர் கோரிக்கை!!

547

uk

பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கையர்களை சுயவிருப்பத்துடன் நாடு திரும்புமாறு, பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் கோரியுள்ளார்.

இதற்காக விசேட சுயாதீன வேலைத்திட்டம் ஒன்றை பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு சுயாதீனமாக பிரித்தானியாவில் இருந்து வெளியேறுகின்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு மீண்டும் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் வழங்கும் போது உயர்ஸ்தானிகர்,

எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சுயவிருப்புடன் பிரித்தானியாவில் இருந்து வெளியேறும் சட்டவிரோத குடியேறிகள் மீண்டும் பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்படுகின்ற தடையின் காலம் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.