வவுனியா மாவட்ட வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி மன்ற நிகழ்ச்சித்திட்டம் 2016 வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (13.05.2016) மாலை வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.திரேஸ்குமார், சிறப்பு விருந்தினராக திருமதி. எஸ்.புத்மரஞ்சன் பணிப்பாளர், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களம் வவுனியா மாவட்ட செயலகம், பிரதம கணக்காளர், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம், மாவட்ட செயலகம் வவுனியா. மற்றும வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சிசு திரிய புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கொடுப்பனவு சான்றிதழ் வழங்கல், சிப்தொற புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கல், சமூக அபிவிருத்தி மன்ற நிதிக்கொடுப்பனவு வழங்கல், புத்தாண்டு சேமிப்பில் திறம்பட செயற்பட்ட சங்கத் தலைவர்களை கௌரவித்தல், புத்தாண்டு சேமிப்பு வாரத்தில் மகாசங்க மட்டத்தில் அதி கூடிய சேமிப்புச் செய்த 10 வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசில் வழங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன.



















































