சிம்புவுடன் ஒன்றாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட ஹன்சிகா!(படங்கள்)

500

தமிழ்த் திரை உலகின் புதிய காதல் ஜோடி சிம்பு- ஹன்சிகா. இருவரும் தங்களது காதலை பகிரங்கப்படுத்தியும் இருக்கின்றனர். தற்போது தாமும் சிம்புவும் கட்டிப்பிடித்தபடியான புகைப்படத்தை தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார் ஹன்சிகா.

சில நாட்களுக்கு முன்பு ஹன்சிகாவின் பிறந்த நாள் வந்தது. அதற்கு முன்பாக ஹன்சிகாவுக்கு என்ன மாதிரி பரிசுப் பொருள் வழங்குவது என்பதில் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சிம்பு டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

பின்னர் ஹன்சிகாவின் பிறந்த நாளன்றும் இளவரசி என்றெல்லாம் வர்ணித்திருந்தார் சிம்பு. இந்த நிலையில் விருந்து ஒன்றில் சிம்புவும் தாமும் கட்டிப் பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை தமது பேஸ்புக் பக்கத்தில் ரிலீஸ் செய்திருக்கிறார் ஹன்சிகா.

இதைத் தொடர்ந்து அந்த விருந்தில் எடுக்கப்பட்ட வேறு சில படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

sumbu1 simbu2