யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

445


யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களை சிலரை வணிக பீடத்தை சேர்ந்த மாணவர்கள் தாக்கியதை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இது பற்றி தெரியவருவதாவது இரு பீடத்தை சேர்ந்த மாணவர்களுக்கிடையே அண்மைக்காலமாக கருத்து முரண்பாடுகள் காணப்பட்டிருந்தன இதன் விளைவாக வவுனியா குட்செட் வீதியில் வைத்து வணிக பீட மாணவர்கள் சிலரால் பிரயோக பீட மாணவர்கள் தாக்கப்பட்டனர்.இதனால் நான்கு மாணவர்கள் காயங்களுக்குள்ளானர். இதில் ஒரு மாணவன் பலத்த தாக்குதலுக்கு உள்ளானதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.vavuniaya9 vavuniya1 vavuniya2  vavuniya3 vavuniya4 vavuniya5 vavuniya6 vavuniya7 vavuniya8