வவுனியா மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தருணம் – வவுனியா பெரியார்குளத்தில் சித்தார்த்தன்..!

302


வவுனியா பெரியார்குளத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று நேற்று நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர்களான ஜி.ரி லிங்கநாதன் (விசு), கே.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோரை ஆதரித்து கிராமவாசி வேலாயுதப்பிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் இரா.சுப்பிரமணியம், புளொட் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், கவிஞர் ஜெகன், கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர்களான ஜி.ரி லிங்கநாதன் (விசு), கே.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் உரையாற்றினர்.இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் திரு. சித்தார்த்தன், இன்றிருக்கின்ற சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும்.

இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பாரிய வெற்றியினைப் பெறுவதற்கு தவறினால், கூட்டமைப்பு இன்று கூறுகின்ற விடயங்கள், மகிந்த அரசு தமிழ் மக்கள் மீது நாடாத்துகின்ற அடக்குமுறை போன்ற அனைத்தையுமே இல்லை என்கிற ஒரு செய்தியை தமிழ் மக்கள் உலகிற்கு கொடுத்துவிடுவதாக அமைந்துவிடும்.ஆகவே இவ்விடயத்தில் அனைவரும் மிகவும் கவனமாக செயற்பட்டு ஜி.ரி.லிங்கநாதன் இல:04, கே.சந்திரகுலசிங்கம் இல:05 இந்த இரண்டு இலக்கங்களுக்கும் வாக்களிப்பதன் மூலம் ஒரு நல்ல சேவையாளர்களை வவுனியா மாவட்டத்திற்கு பிரதிநிதியாக அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டார்.vavuniya1 vavuniya2 vavuniya3 vavuniya4