நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் களனி கங்கை பெருக்கெடுத்தமையால் வெல்லம்பிட்டி பகுதி நீரில் மூழ்கியுள்ளது. வீதிகள், பாடசாலைகள் மக்களின் குடியிருப்புகள் என அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் மிகுந்த துயரத்துள்ளாகியுள்ளதுடன் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மீட்கும் பணியில் மூப்படையினருடன் இணைந்து பொலிஸார், தொண்டு நிறுவனத்தினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் இம்மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை விநியோகிக்கும் பணியில் அரச அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஊடகங்களான சக்தி, சிரச , எம்.ரி.வி.(மகாராஜா கூட்டத்தபானம்) வசந்தம் மற்றும் தமிழ் எப்.எம். சேவை ஊழியர்கள் என சகோதரமொழி வானொலிகளும் நிவாரணங்களை சேகரிக்கும் பணியை சிறப்பாக மேற்கொண்டுவருகின்றன.
நேற்று கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அனர்த்தத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான சேகரிக்கப்பட்ட உலர்உணவுப் பொருட்களை மகாராஜா கூட்டத்தபானம் வழங்கியிருந்தது.
இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவில் நிதிபற்றி கவலைப்படாது போதுமான அழவு அனர்த்தத்துக்குள்ளாகிய மக்களுக்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை இந்திய அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்களை விமானம் கப்பல் மூலமும் அனுப்பி வைத்துள்ளது.




















