வெசாக் தினத்தை முன்னிட்டு 540 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!!

815

Jail

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு 540 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கே பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல் தெனிய கூறினார்.

சிறைச்சாலையில் சிறு குற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டவர்களின் தண்டனைக்காலம் குறைக்கப்படவுள்ளதுடன் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபாரத் தொகையும் பொதுமன்னிப்பின் ஊடாக இரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பாரிய குற்றங்களை இழைத்தவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கவில்லை எனவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.