வவுனியா மன்னார் வீதி கடந்த பல வருடங்களாக சீரற்ற நிலையில் குன்றும், குழியுமாக காணப்படுகின்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அடிக்கடி செப்பணிடப்படுகின்ற போதும் அவ் வீதி செப்பனிடப்பட்டு சில வாரங்களிலே மீண்டும் பழுதடைவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது வவுனியா நகரிலிருந்து சாம்பல்தோட்டம் வரை 6 கிலோமீற்றர் பாதை செப்பணிடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இவ் வீதி புனரமைப்பு பணியின் போது மணல் போடப்படுவதனால் வீதி விபத்துக்கள் ஏற்ப்படுகின்றன.
இன்றைய தினம் இவ் வீதி புனரமைப்பின் பின்னர் போடப்பட்ட மண்ணினால் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு செப்பணிடப்படும் வீதி இன்னும் இரு வாரங்களில் மீண்டும் பள்ளமாக காணப்படும். இவ்வாறான அபிவிருத்தி எமக்கு தேவையில்லை. முழுமையாக நீண்டகால அடிப்படையில் செப்பணிட்டுத் தருமாறு அதிகாரிகளை கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
உரிய அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு.















