வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத்தாருங்கள் : தாயார் வேண்டுகோள்!!

902

harishnavi

வவுனியா உக்குளாங்குளத்தில் பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி (13 வயது) பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இன்றுவரை விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும் மருத்துவ அறிக்கைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளதாகவும், விசாரணைகள் பின்செல்வதால் குற்றவாளி தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.

கடந்த 16.02.2016 அன்று வீட்டில் தனியாக இருந்தபோது பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். எனினும் இன்று வரையில் குற்றவாளி இனங்காணப்படவில்லை.

சந்தேகத்தின் பேரில் அயல்வீட்டில் இருந்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிசாரால் மருத்துவ அறிக்கை பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் தெரியவருகின்றது.

அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் இவ்விடயத்தில் தலையிட்டு தீர்வினைப் பெற்றுத்தருமாறு தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.