நுவரெலியா குதிரை பந்தயத் திடலில் ஆண் பெண் இருபாலருக்குமான ஆடை அலங்கார கண்காட்சி நிகழ்வு ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆடை வடிவமைப்பாளர்களின் கைவண்ணத்தில் உருவான அழகிய ஆடைகளை அணிந்து வந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மொடலிங் ஆண்களும் பெண்களும் விதவிதமாக ஆடைகளை அணிந்து காட்சிப்படுத்தியுள்ளார்கள். இவர்களது நிகழ்வு பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.














