காற்றுடன் கூடிய கடும் மழை பெய்யும் சாத்தியம் : வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!!

983

Rain

நாட்டின் மேல், வடமேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று(26.05.2016) மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் கன மழைக்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் காற்று பலமாக வீசக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாகவும், கடற்கரை பிரதேசத்தில் காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தென்மாகாணம், கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரையோரங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் அதேவேளை,

இடி மின்னல் தாக்கமும் அதிகரித்து காணப்படுவதனால் பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும் படி வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.