நடுவானில் குழந்தையை பிரசுவித்த பெண்..!

760

planeவிமானம் வானில் பறந்துக்கொண்டிருந்த போது, கர்ப்பிணிப் பெண் ஒருவர் பெண் பயணிகளின் உதவியுடன் அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோ நாட்டின் காசாபிளாங்கா நகரில் இருந்து இத்தாலியில் உள்ள பொலோக்னா சென்ற ராயல் ஏர் மொராக் விமானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 39 வயது மதிக்கத்தக்க நிறைமாத கர்ப்பிணி பயணம் செய்தார்.

விமானம் வானில் பறந்துக்கொண்டிருந்த போது அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தது.

உடனடியாக விமானிக்கு தகவல் அளிக்கப்பட்டது. பார்சலோனா விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.

அதற்குள், விமானத்தில் இருந்த பெண் பயணிகள் துணையுடன் அந்த பெண் அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார்.

பார்சலோனா விமான நிலையத்தில் தயாராக நின்ற ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு சண்ட் ஜோன் டி டியு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பிரசவித்த பெண் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவரது பெயர் என்ன? என்ற தகவல்களை கூற விமான சேவை நிறுவனம் மறுத்துவிட்டது.

பார்சலோனாவில் 50 நிமிடம் தாமதிக்கப்பட்ட அந்த விமானம் மீண்டும் பொலோக்னாவிற்கு புறப்பட்டு சென்றது.